திருவனந்தபுரம், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் கிரேவிஸ் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி, கில்லுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில், கோலி சதம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த கில், 13 பவுண்டரி, 1 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். அவர் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து விராட் கோலி அதிரடி காட்டினார். அவர் 74 பந்தில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச தவறினர். அத்துடன், சில கேட்ச்களையும் கோட்டைவிட்டனர். இந்திய அணி வெற்றி இறுதியில் இந்திய அணி 41.4 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது. கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரியும், 9 சிக்சரும் அடங்கும். கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/centuries-from-gill-and-kohli-india-secures-a-magnificent-victory-over-west-indies




