மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் இருந்த கேண்டீனில் உணவுப்பொருள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை என்று கூறி அதன் லைசென்ஸை ரத்து செய்துள்ளார். துகாராம் முண்டேயின் செயலால் அனைத்து உணவகங்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா மக்களின் பிரத்யேகமான விருப்ப உணவாகக் கருதப்படும் வடாபாவ்களை பள்ளி அருகில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளார். உப்பு மற்றும் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அதிகமுள்ள இந்த வகை உணவுபொருட்கள் மாணவர்களின் உடல் நலத்திற்கு எதிரானது என்று கூறி அவற்றை பள்ளியில் விநியோகம் செய்யவும் தடை விதித்து இருக்கிறார். வடாபாவ் துகாராம் முண்டேயின் புதிய உத்தரவுப்படி அதிக கொழுப்பு, டிரான்ஸ்-ஃபேட் (trans-fat), சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட உணவுகள் (பொதுவாக HFSS உணவுகள் என அழைக்கப்படுபவை) இனி பள்ளி வளாகத்திற்குள்ளோ அல்லது பள்ளியைச் சுற்றியுள்ள 50 மீட்டர் சுற்றளவிலோ விற்பனை செய்யப்படவோ, இலவசமாக வழங்கப்படவோ அல்லது விளம்பரப்படுத்தப்படவோ கூடாது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், உறைவிடப் பள்ளிகள் அல்லது வேறு ஏதேனும் வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் என மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும். இந்த உத்தரவு சுமார் 1.08 லட்சம் பள்ளிகளையும், ஏறக்குறைய இரண்டு கோடி மாணவர்களையும் உள்ளடக்கியதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவின் கீழ், வடா பாவ், சமோசா, வறுத்த தின்பண்டங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், சர்க்கரை பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்கள் பள்ளிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள 50 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அறிவித்த மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டே, இந்த நடவடிக்கை மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பான உணவு, பாதுகாப்பான மகாராஷ்டிரா பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது என்றும் கூறினார். இவ்விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தையே சாரும் என்று முண்டே தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை பள்ளிக் கல்வித் துறை கண்காணிக்கும் என்றும் கூறினார். பள்ளி உணவகங்கள், விடுதி உணவகங்கள், மதிய உணவுத் திட்ட சமையலறைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு வழங்கும் அனைத்து அமைப்புகளும் இனி இது செல்லுபடியாகும். பள்ளிகளில் இருக்கும் கேண்டீன்களில் இந்த உணவுப்பொருள்தான் பிரதானமாக இருக்கும். அதற்கு தடைவிதித்து இருப்பது பள்ளி கேண்டீன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. துகாராம் முண்டே அதோடு பள்ளிகளில் பிறந்தநாளன்று சாக்லேட் வழங்குதல் அல்லது கொண்டாட்டங்களின்போது சமோசா, வடா பாவ், லட்டு போன்ற சிற்றுண்டிகளை இலவசமாக மாணவர்களுக்கு விநியோகம் செய்யக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஊட்டச்சத்து விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசிய தவெக நிர்வாகி; வெளியான ஆடியோ - அறிக்கை விட்ட மா.செ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/ban-on-vada-pav-and-samosa-sales-near-maharashtra-schools




