சென்னை, எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக நிற்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் துணிச்சலாகச் செய்திருக்கிறார். இபிஎஸ் வேடிக்கை தான் ஆட்சியில் இருக்கும்போதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து உதயநிதி ஸ்டாலின் கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதல்-அமைச்சராக இருந்த இபிஎஸ் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரீகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள் மீது இந்தத் தவெக அரசு எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றிச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும். திமுகவினர் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தை ஏற்புடையதாக இருக்கிறதா? என்பதை திமுகவினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும். இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாக பேச உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar




