சென்னை, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஆய்வு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 1-வது மற்றும் 4-வது பிளாக் பகுதிகளில் உள்ள கால்வாயில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வார்டு-186க்குட்பட்ட உள்வட்டச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, வார்டு-188க்குட்பட்ட பெரியார் நகர் நகர் 1-வது தெருவில் சாலைகள், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம், மயிலை பாலாஜி நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் அகற்றும் பணி, அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, லட்சுமி நகர் மற்றும் பெரியார் நகரில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், வார்டு-189க்குட்பட்ட ராம் நகரில் கட்டப்பட்டு வரும் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் கட்டுமானப் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-deputy-commissioner-inspects-perungudi-zone




