புதுடெல்லி, இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 156 ரன்கள் அடித்த நிலையில், 13.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா வெற்றிபெற்றது. இதில் அபிஷேக் சர்மா 82 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் எடுத்தனர். வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த வெற்றிக்கு பங்களித்தனர். பும்ரா அணிக்கு மிகப்பெரிய பலம். அவர் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்துவீசி, மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் தேவையான வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். அர்ஷ்தீப்பும் சிறப்பாக பந்துவீசினார். அதன்பிறகு அக்சர் மற்றும் வருண் ஆகியோர் வீசிய விதமும் அபாரமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறப்பான கூட்டு முயற்சி. இஷான் தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். டிரெஸ்ஸிங் ரூமிலும், பயிற்சி நேரங்களிலும் அவர் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறார். தற்போது தனது ஆட்டத்தைப் பற்றி அவருக்கு நல்ல தெளிவு உள்ளது.என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/everyone-came-together-and-contributed-to-the-victory-shreyas-iyer




