சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள வன உயிரியல் பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம், அங்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி, அடிக்கடி அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள வனப்பகுதி சாலைகளை கடப்பது வழக்கம். இந்த நிலையில், பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் வன உயிரியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், அவ்வப்போது பூங்கா பகுதிக்குள் சென்று வருவது உண்டு. பூங்காவிற்குள் புகுந்த சிறுத்தை நேற்று மாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று, எதிர்பாராதவிதமாக இந்த வன உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்தது. பூங்காவின் உள்ளே புகுந்த அந்த சிறுத்தைப்புலி, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உலா வந்தது. பக்தர்கள் அச்சம் பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி நடமாடுவதை நேரில் பார்த்த பண்ணாரி மாரியம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதே நேரத்தில், அங்கிருந்த ஒரு சிலர் தங்களது செல்போன்களில் சிறுத்தைப்புலி உலா வரும் காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக தப்பினர் சிறுத்தைப்புலி புகுந்த சமயத்தில், மாலை நேரம் என்பதால் பூங்காவின் உட்பகுதிக்குள்ளே பக்தர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் எவ்வித அசம்பாவிதமும், உயிர்ச் சேதமும் இன்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.வனப்பகுதியை ஒட்டியுள்ள பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி புகுந்த சம்பவம் பண்ணாரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/pannari-wildlife-park-leopard-sighting-sparks-fear




