மதுரை, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காரைக்குடியைச் சேர்ந்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 30 வயது அழகு நிலைய பெண் உரிமையாளருக்கும், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த டாக்டர் மணிரத்தினத்திற்கும் சமூக வலைத்தளம் வழியாகப் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, டாக்டர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானார். வழக்குப்பதிவு இதையறிந்த டாக்டர் பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்கக் கூறி மாத்திரைகள் வழங்கி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் திருமணத்திற்கு மறுத்த நிலையில் மணிரத்தினம் மீது, பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-case-registered-against-doctor-who-made-young-woman-pregnant




