முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். நாளை படம் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்தும், தான் இயக்குநராக அறிமுகமாவது குறித்தும் ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Jason Sanjay ஜேசன் சஞ்சய், ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதற்றமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம்ஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களை முன்னின்று வழிநடத்திய லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி. என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகிய இருவருக்கும் நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. Sigma - Jason Sanjay எந்தவொரு இயக்குநருக்கும், குறிப்பாக அறிமுக இயக்குநருக்கு அவரது சிந்தனையுடன் ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்த் அவர்களுடன் பணியாற்றியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் சிக்மா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோல், எங்கள் படத்தின் எடிட்டராக அனுபவமும் புரிதலும் கொண்ட பிரவீன் கே.எல். அமைந்ததும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்டும் திரைப்படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. குறிப்பாக, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. எங்களது ஆக்ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்தின் மையக் கதைக்களத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும், சுவாரஸ்யத்தையும் சேர்த்துள்ளனர். திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Jason Sanjay சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களையும் சென்றடையும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம். ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும், பணிவுடனும், அக்டோபர் 2 ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு, எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சினிமா எனும் பிரமாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. ’சிக்மா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/jason-sanjay-sigma-movie-statement-kollywood



