சென்னை, மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வு இதுதொடர்பாக சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singappen Special Force SSF), பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விரைவான தலையீடு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், தீவிர ரோந்துப் பணி, சமூக விழிப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 பெண்கள், 7 குழந்தைகள் 21.08.2026 முதல் 27.08.2026 வரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 252 புகார்களுக்கு சம்பவ இடம் சென்று விசாரனை மேற்கெள்ளப்பட்டுள்ளது. 15 குற்ற வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 3 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே 3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,921 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தை திருமணங்கள் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவ்வாரத்தில், அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 5 நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் தேவையான ஆதரவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. வழக்குகள் பதிவு சென்னை, கள்ளகுறிச்சி, திருப்பூர், தேனி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவான தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் அடிப்படையில் (POCSO ACT) தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (BNS), குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) உள்ளிட்ட தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான களப்பணிகள், அதன் அடிப்படை அணுகுமுறையான "தடுப்பு பாதுகாப்பு நம்பிக்கை உருவாக்குதல்" என்பதை பிரதிபலிக்கின்றன. களத்தில் கண்கூடாகத் தெரியும் காவல் பணி, புகார்களுக்கு விரைவான நடவடிக்கை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், சமூகப் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் அச்சமற்ற தமிழகத்தை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-actions-were-taken-by-the-singapenn-lioness-special-task-force-across-tamil-nadu




