விருதுநகர், தகர கொட்டகை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 2 பேர் பலி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை இதைபோல சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக காகித அட்டைகளில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-a-cracker-warehouse-near-sivakasi-2-dead




