சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர் தீவிர நடவடிக்கைகள் மூலம் 7 நாட்களில் 258 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தீவிர ரோந்துப்பணி. குற்றதடுப்பு நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார எல்லைக்குட்பட்ட காவல்துறையினருடன் சிறப்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 04.09.2026 முதல் 10.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, களப்பிரிவினரின் செயல்பாடுகள் 04.09.2026 முதல் 10.09.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணிபிரிவுகள் 258 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நேரடியாக சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். 14 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி புரிந்துள்ளனர். மேலும், காணாமல் போன 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கண்டறியப்பட்டு. அவர்களை பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குற்றதடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பாக 3484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் 13,581 பாதிப்புள்ளாகக்கூடிய இடங்கள் குற்றதடுப்பு ரோந்துப்பணிகளின் மூலம் இக்காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுகளை கொண்ட 6 நபர்கள் மீட்கப்பட்டு. 6 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் கிடைக்க கண்காணிக்கப்பட்டன. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 6 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய 71 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. வழக்குகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலையீட்டின் பேரில், தென்காசி, மதுரை, தஞ்சாவூர். சேலம், நாமக்கல், திருப்பூர். கோவை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடவடிக்கை மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுக்கள் உதவியாக இருந்தது. குறிப்பிடத்தக்க களப்பணிகள் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்புப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 14 வயது 9 ஆம் வகுப்பு மாணவன். 20 வயது மற்றும் 30 வயது மதிக்கதக்க நபர்கள் தன்னை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்று பாலியல்வன்கொடுமை செய்ததாகவும். கடந்த 3 மாதங்களாக மிரட்டி துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்தான். எஸ்எஸ்எப் உடனடியாக காவல் நிலையத்திற்கும் பெற்றோருக்கும் தகவல் அளித்து புகார் அளித்து வழக்குபதிவு செய்ய உரியநடவடிக்கை மேற்கொண்டனர். ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். உதவி எண் 1091 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் சூழ்நிலையில் எவ்விததயக்கமும் இன்றி முன் வந்து. உடனடி உதவிக்காக சிங்கப்பெண் உதவி எண் (1091) என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவி தேவைப்படும் நேரங்களில் தயங்க வேண்டாம் சிங்கப்பெண் உதவி எண் 1091-ஐ அழைக்கவும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, குற்றத்தடுப்பு. உடனடி தலையீடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள். மீட்பு. மறுவாழ்வு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-258-complaints-7-days




