கரம்பயம், பட்டுக்கோட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சைாவ பறிமுதல் செய்த போலீசார் சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர். கஞ்சா பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை அணைக்காடு புறவழிச்சாலை சுடுகாடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரூ.3.11 லட்சம் மதிப்பிலான 6.226 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். கைது விசாரணையில் அவர்கள் ஏனாதி பகுதியை சேர்ந்த ஆசைப்பாண்டி என்ற ஆசைத்தம்பி(வயது26), ஊரணிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (20), காடுவெட்டி விடுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (20), ஏனாதியை சேர்ந்த அஜய் (22). தஞ்சையை சேர்ந்த அபி என்ற சிவநேசன்(19), 17 வயது சிறுவன் ஒருவன் மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த வினோத் என்ற அரவிந்த் (27) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/6-kg-of-cannabis-smuggled-in-a-car-seized-7-people-including-a-minor-arrested




