ரியான் கூக்லர் இயக்கத்தில் டேவிட் ஜான்சன் நடிக்கும்‘பிளாக் பாந்தர் 3’ திரைப்படம் 2028ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகவுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் முதல்முறையாகக் கருப்பின சூப்பர் ஹீரோவாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பிளாக் பாந்தர்’ முதல் பாகம் உலகளவில் சுமார் ரூ.10,000 கோடி வசூல் செய்து, சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்ற முதல் சூப்பர்ஹீரோ திரைப்படமாக வரலாறு படைத்தது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு வெளியான ‘பிளாக் பான்தர்: வகாண்டா பாரெவர்’ உலகளவில் ரூ.8,295 வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. புதிய பிளாக் பேந்தர் ‘பிளாக் பாந்தர்’ படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மென் புற்றுநோயினால் 2020-ல் இறந்தார். இதனால் சாட்விக் போஸ்மேன் நடித்த ‘டீ-சாலா’ கதாபாத்திரத்தின் மகனாக டேவிட் ஜான்சன் நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவரே அடுத்த தலைமுறை பிளாக் பேந்தராகப் பொறுப்பேற்கிறார். முந்தைய இரு பாகங்களை இயக்கிய ரியான் கூக்லர் மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குகிறார். லெட்டிஷியா ரைட் மற்றும் வின்ஸ்டன் டியூக் ஆகியோர் மீண்டும் தங்களது முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் முழுமையாக ஐமேக்ஸ் கேமரா வடிவில் உருவாக்கப்பட உள்ளது. பிரிட்டிஷ் நடிகரான டேவிட் ஜான்சன் கடைசியாக தி லாங் வாக், வேஸ்ட்மேன் படங்களில் நடித்துள்ளார். இவரின் ‘தி சாபேரோப்னெஸ்’ படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது. வகாண்டாவின் அடுத்த வாரிசு: 2022-ல் வெளியான ‘பிளாக் பான்தர்: வகாண்டா பாரெவர்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், டீ-சாலா மற்றும் நகியாவிற்கு பிறந்த இளம் மகன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது 3-ஆம் பாகத்தில் அவர் வளர்ந்து, வகாண்டாவின் புதிய பிளாக் பேந்தராக உருவெடுக்கும் கதையாக இது அமையும். இந்நிலையில், ‘பிளாக் பாந்தர் 3’ திரைப்படம் 2028ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதியில் ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/black-panther-3-film-release-date-announced




