மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் போதுமா? மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றால், தற்போதைய காலகட்டத்தில் அதை நல்ல கவுரவமான சம்பளமாக நினைக்கிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான வசதிகளைப் பூர்த்தி செய்துகொள்ள இந்தச் சம்பளம் போதுமானதுதான். கல்வி, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போதுமானதுதான் என்பது மக்களின் எண்ணமாக இருக்கும். பணவீக்கம். குறையும் பணத்தின் மதிப்பு ஆனால், இன்னொரு பக்கம் பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறைவதும் பொருட்களின் விலை அதிகரிப்பதுமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியை தற்போது உள்ள விலைவாசியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே இதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அதிகரித்து வரும் பணவீக்கம், காலப்போக்கில் பல்வேறு பொருட்களின் விலையை அதிகரித்துவிடுகிறது. ரூ.1 கோடி இருந்தால் எதிர்காலம் கவலையில்லையா? 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரூ.100-ன் மதிப்பு தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என்பதைத் தனியாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்கள் பலரும், தற்போது கையில் ரூ.1 கோடி இருந்தால் எதிர்காலம் கவலையற்றதாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், தற்போது உள்ள ரூ.1 கோடிக்கு இருக்கும் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் இருக்காது. ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் ரூ.1.79 கோடியாகலாம்! எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 5 முதல் 6 சதவீதம் வரை உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், 6 சதவீத பணவீக்க விகிதத்தில் பொருட்களின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். அதாவது, தற்போதைய ரூ.1 கோடியின் மதிப்பு 10 ஆண்டுகள் கழித்து ரூ.55 லட்சத்து 84 ஆயிரமாக இருக்கும். அதேநேரத்தில், இப்போது ரூ.1 கோடிக்கு வாங்கப்படும் பொருட்களின் விலை எதிர்காலத்தில் ரூ.1.79 கோடியாக அதிகரிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-know-how-much-rs-1-crore-will-be-worth-after-10-years




