கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாகக்குப்பம் என்ற கிராமத்தில் நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த சாமிதுரை மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-country-made-gun-father-son-arrested




