சென்னை, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், 'வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா' (FCRA)-2026க்கு எதிராக, ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம். காரணம், இச்சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-ல் கொண்டு வரப்பட்டு, அந்தந்த கால மாற்றங்களுக்கு ஏற்ப 2010, 2016, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக-வால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் NGO-க்களுக்கு வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. மேலும், NGO-க்களை முறையாக பதிவு செய்வது. விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது, வரவு-செலவுகளுக்கான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறைகளைத்தான் தற்போதைய மசோதா முன்மொழிகிறதே தவிர, NGO-க்களின் நிதியுதவியை முடக்குவதற்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை. சமூக நலனுக்காக வழங்கப்படும் நிதியுதவி, சரியான நோக்கத்திற்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பது தான் FCRA-வின் முக்கிய நோக்கம். அதுமட்டுமன்றி ஓர் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அதன் வெளிநாட்டு பங்களிப்புகளும், அதன் மூலம் உருவான சொத்துக்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்ற 2010-ன் விதியை திருத்தி, ரத்து செய்யப்பட்ட அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும், பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதை உறுதி செய்கிறது FCRA-வின் புதிய திருத்த மசோதா. எனவே, தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவை, தங்களின் வாக்கரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்றுக் கட்சியினர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran




