சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை யில் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மாணவி ஒருவர். 3-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர், சம்பவத்தன்று பல்கலைக்கழக வேதியியல் துறை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த வேதியியல் துறை தலைவரும், பேராசிரியருமான ராஜேந்திரன் என்பவர், மாணவியிடம் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேராசிரியர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளர் சிங்கார வேலு உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-university-professor-suspended




