புதுடெல்லி, இன்று டெல்லியில் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை கூட திறக்க கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டிய அளவு குறித்து கர்நாடகாவுக்கு உத்தரவிட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆனையத்தின் 56 வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இந்தநிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58ஆவது கூட்டம் காணொளி மூலம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் குழு வலியுறுத்த உள்ளது; தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 25 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளது. காவிரியில் நீர் திறக்க கர்நாடகம் மறுத்து வரும் நிலையில் தமிழகம் தரப்பில் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-management-commission-to-meet-in-delhi-today




