புதுடெல்லி, டெல்லி கிராரி தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அனில் ஜா வாட்ஸ், பனியன் மற்றும் டவுசருடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தனது தொகுதி மக்கள் கொண்டு வந்த விண்ணப்பங்களில் கையெழுத்திடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரைகுறை ஆடை அரசு திட்ட பலன்களை பெறுவதற்காக, பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் அவரது அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பை மறந்து, அரைகுறை ஆடையுடன் அமர்ந்து அலட்சியமாக கையெழுத்திட்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சட்டசபையில் முதல்-மந்திரி ஆக்ரோஷம் இந்த வீடியோ விவகாரம் டெல்லி சட்டசபை கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடித்தது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் இந்த அநாகரிக செயலை டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா சராமாரியாக சாடினார். வெட்கமாக இல்லையா? "உங்களிடம் கையெழுத்து வாங்குவதற்காக ஏழை எளிய பெண்கள் வரிசையில் வந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் இப்படியான அரைகுறை ஆடை அணிந்து அமர்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியா பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது?மக்கள் உங்களை நம்பி தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். அடிப்படை ஒழுக்கம் அவர்கள் முன் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கம் கூடத் தெரியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது."என்று டெல்லி முதல்-மந்திரி கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் முன்னிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பனியன், டவுசருடன் அமர்ந்திருந்த வீடியோ டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/delhi-mla-slammed-for-meeting-public-in-vest




