கோவை கோவை குற்றால அருவியில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோவை குற்றாலம் அருவி இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளிக்க தடை இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் இன்று முதல் அருவி மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-waterfalls-floods-again-bathing-ban-imposed




