லக்னோ, வட இந்தியாவில் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் இந்த பண்டிகையின்போது சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்வர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பூர்வாமிர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சித்கி சர்மா (வயது 16). இவர் ரக்ஷா பந்தன் தினமான இன்று காலை தனது சகோதருக்கு ராக்கி கயிறு கட்ட வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி அங்கு அவரது சகோதரன் நின்றுகொண்டிருந்த நிலையில் அங்கு பயன்பாடற்று மூடப்பட்டிருந்த ஆள்துளை கிணறு பகுதிக்கு சித்கி சர்மா சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆள்துளை கிணற்றுக்குள் சித்கி சர்மா விழுந்துள்ளார். 20 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றுக்குள் சித்கி சர்மா விழுந்த நிலையில் இது குறித்து தீயணைப்பு, மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ஆள்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/girl-falls-into-borewell-on-raksha-bandhan




