திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுனில் (வயது 40). அரசு ஊழியரான இவர் ஆழப்புலாவில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வந்தார். காட்டெருமை தாக்கி உயிரிழப்பு இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி சுனில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டெருமை சுனிலை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சுனிலை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/kerala-government-employee-killed-by-wild-buffalo-attack




