தங்கம், வெள்ளி மீது எப்போதும் நம் மக்களுக்குத் தனிப்பிரியம் உண்டு. இந்த இரண்டையும் வாங்க, முதலீடு செய்யப் பொதுவாகவே நம் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இப்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டது. அதனால், இந்த நேரத்தில், வேறு உலோகத்தை நோக்கி நம்முடைய முதலீடுகள் செல்வதுதான் புத்திசாலித்தனம். அது எந்த உலோகம் என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர். கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி “கமாடிட்டி மார்க்கெட்டில் என்ட்ரி மற்றும் எக்ஸிட் மிக மிக முக்கியமானது. அதாவது எப்போது முதலீடு செய்வது. எப்போது முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறுவது என்பதாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டன் இரும்புத்தாது 140 அமெரிக்க டாலர் என வர்த்தகமாகி வந்தது. ஆனால், அதன் இப்போதைய விலை 97 டாலர் என்கிற அளவில் உள்ளது. ஏன் இந்த இறக்கம் என்று பார்த்தால், இந்தச் சப்ளை தற்போது அதிகம் உள்ளதுதான் காரணம். தற்போது சந்தையில் இரும்புத்தாதின் சப்ளை மிக அதிகமாக உள்ளது. காமிடிட்டி சந்தையைப் பொறுத்தவரைக்கும், ஒரு பொருளின் சப்ளை அதிகமாக இருந்து, விலை குறைவாக இருக்கும்போது, அதில் முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் சப்ளை குறைந்து விலை அதிகரிக்கும்போது, அதை விற்றுப் பணம் பார்க்க வேண்டும். இதுதான் கமாடிட்டி சந்தையின் சீக்ரெட். இதனால், இப்போது இரும்புத்தாதின் விலை குறைவாக இருக்கிறது. இதன் சப்ளை இரண்டு மூன்று ஆண்டுகளில் குறையலாம். அப்போது இதை விற்பதற்கு இப்போதே முதலீடு செய்வது நல்லது. இரும்புத்தாது இந்தியாவில் அரசு நிறுவனமான NMDC நிறுவனம் இரும்புத்தாது உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இப்படியான நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். இரும்புத்தாது நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்றதும் எதையும் யோசிக்காமல். பார்க்காமல் முதலீடு செய்துவிடக் கூடாது. இரும்புத்தாது குறித்துப் புரிந்துகொண்டு, இது சார்ந்து எந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனம் குறித்து ஆராய்ந்து எல்லாம் கிளியர் ஆனால், தாராளமாக முதலீடு செய்யலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/personal-finance/share-market/iron-ore-at-lower-prices-a-new-investment-opportunity




