கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்) கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், எஸ்.ஐ அன்பழகன், எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் டீம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு வந்த பதிவு எண் இல்லாத டாடா இன்டிகா காரிலிருந்து ஆண் ஒருவர் தப்பியோட, காரில் இருந்த கவிதா என்ற பானுமதியைப் பிடித்தனர். காரை சோதனை செய்ததில் 1.250 கிலோ கஞ்சாவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் ரூ.70,650 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட கவிதா, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், கவிதா மீது 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் சிப்காட், ஓசூர் டவுன், கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் கந்திகுப்பம் காவல் நிலையங்களில் கஞ்சா தொடர்பான 4 வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கவிதா என்ற பானுமதி இதில், கந்திகுப்பம் காவல் நிலையத்தில் 200 கிலோ கஞ்சா தொடர்பான குற்றச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, கவிதா மீது தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ள கிருஷ்ணகிரி எஸ்.பி அனிதா, டி.எஸ்.பி ராமச்சந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் 28.08.2026 அன்று குண்டர் சட்டத்தைப் பிறப்பித்தார். உத்தரவின்படி வேலூர் சிறப்பு பெண்கள் சிறையில் கவிதாவிடம் குண்டர் சட்ட உத்தரவின் நகல் வழங்கப்பட்டது. இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை கல்லூரிக்குள் கண்காணித்தால் போதுமா. - கல்லூரிக்கு வெளியே போதை மாஃபியாக்களை வேரறுக்குமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/krishnagiri-kanja-smuggling-women-arrested-kundas-section



