சென்னை, திறந்தவெளி அணுகல் (Open Access) அனுமதிகள் மின்வாரியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சில நாளிதழ்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான 'திறந்தவெளி நுழைவுரிமை' அனுமதிகளைத் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாநில மின்சுமை பகிர்மான மையம்நிறுத்தி வைத்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய செய்தி முற்றிலும் தவறானவை. தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்ட 3 வேலை நாட்களுக்குள் 'திறந்தவெளி நுழைவுரிமை' அனுமதிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன என்றும், தகுதியுள்ள தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் எதுவும் தற்போது வரையில் நிலுவையில் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. நிலையான அனுமதி இந்த மாதத்தில், இதுவரை 289 உயர் மின்னழுத்த (HT) நுகர்வோருக்கு மொத்தம் 1373 MW அளவிற்கான நிலையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜுன் மாதத்தில் 383 உயர் மின்னழுத்த நுகர்வோருக்கு 1752 MW அளவிற்கும், ஜூலை மாதத்தில் 372 உயர் மின்னழுத்த நுகர்வோருக்கு 1729 MW அளவிற்கும், மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 299 உயர் மின்னழுத்த நுகர்வோருக்கு 1477 MW அளவிற்கும் திறந்தவெளி நுழைவுரிமைக்கான நிலையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தாத 87 விண்ணப்பதாரர்களின் 334 MW அளவிற்கான விண்ணப்பங்கள் மட்டுமே திறந்தவெளி நுழைவுரிமை அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில், நிறைவு செய்யப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திட்டங்களுக்கான மின் தொகுப்பு இணைப்பு நிலுவையில் இருப்பது குறித்து, விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு இவ்வருடம் மே 2026 முதல் இன்று வரையில் மொத்தம் 840 MW அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/open-space-access-permits-not-suspended-electricity-board-explains




