ஹொனலுலு நோலோ புயலை முன்னிட்டு, ஹவாய் தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. நோலோ சூறாவளிப்புயல் ஹவாய் தீவுகளை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. சக்தி வாய்ந்த புயலை முன்னிட்டு, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், ஹவாயின் பிக் ஐலேண்ட்பகுதிக்கு தெற்கே நகர்ந்து செல்கிறது. இதனால் நேற்று அங்கு 51 செ.மீ. வரை அதீத மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் நேரடியாக கரையை கடக்காது என்ற போதிலும், அதன் வெளிவட்டப்பகுதிகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தீவு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தல் புயலால், 16 அங்குலம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும். பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயலானது இன்று காலையில் இருந்து தொடர்ந்து மேற்கு நோக்கி பயணிக்கிறது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் பெரிய அளவில் மற்றும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவில் அலைகள் வீசும். இதனால், மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/nolo-storm-state-of-emergency-declared-in-hawaii




