மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? தனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே. அதற்கு என்ன பதில்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று (செப். 17) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் துரை வைகோ பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. துரை வைகோ அதற்கு பதிலளித்த அவர், " நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று எங்களிடம் சொன்னவர்தான் துரைவைகோ. எங்கள் அப்பா கோவக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது என்றார். சின்னப் பிள்ளையாக இருந்துக்கொண்டு ரொம்ப அதிமுகமாக பேசுகிறார் துரை. எங்களின் வளர்ச்சி நின்று போய் விட்டது என்கிறார். வெற்றி அடைந்த வேட்பாளர் அவர்களுடன் சென்றிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. கடுமையாக தான் பேசுகிறார். அது நியாயமில்லை. தளபதி ஸ்டாலினை பற்றி வயதில் சிறியவராக இருக்கும் துரை வைகோ பேசலாமா? மிசா காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். "ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/kn-nehru-slams-durai-vaiko




