விதவிதமான சைவ உணவு வகைகளை விரும்புபவர்களுக்கு இந்த வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி சிறந்த தேர்வாக இருக்கும். தேங்காய் மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த உணவை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம். தேவையான பொருட்கள்; வாழைக்காய் - 1, சேனைக்கிழங்கு - ½ கிலோ, மிளகு - ½ தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி, மஞ்சள்தூள் - ¼ தேக்கரண்டி, தேங்காய் துருவல் - 1 கப், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - ¼ தேக்கரண்டி, கடுகு - ¼ தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - ¼ தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகு, சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். முக்கால் கப் தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். காய்கள் நன்றாக வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். தேங்காய் கலவையும் காய்களும் நன்றாக ஒன்றாகச் சேரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இந்த வறுத்த தேங்காய் தாளிப்பை எரிசேரியுடன் சேர்த்து நன்றாகக் கிளறி, சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் காலிப்ளவர் பக்கோடா! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/this-is-new-banana-yam-erisseri




