Fuld artikel
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூலை 1-ம் தேதி முகாம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் கோமாரி நோய் மிகவும் முதன்மையானது. இதனால், கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குஉட்பட்ட கன்றுகளில் இறப்பு ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் நேரடி தொடர்பு, காற்று, உமிழ்நீர், அசுத்தமான பொருள்கள் மற்றும் பால் மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. கால்நடைகள் எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சுமார் 1,90,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிப் போடப்படும் கால்நடைகளின் விவரங்கள் `பாரத் பசுதான்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அந்த சமயம், கால்நடை வளர்ப்போரின் அலைப்பேசி எண்ணுக்கு வரும் ஓ.டி.பி-யை கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என அறிவுறுத்தியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




