நகோயா, ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் கம்பு ஊன்றித் தாண்டும் போல் வால்ட்டில் இந்திய வீரர் தேவ் மீனா புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டு 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுத் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். வரலாற்றுச் சாதனை இதில் ஆண்களுக்கான போல் வால்ட் (Pole Vault) பிரிவில், இந்திய வீரர் தேவ் மீனா 5.50 மீட்டர் உயரத்தைத் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இந்திய ஆண்கள் போல் வால்ட் வரலாற்றில் 5.50 மீட்டர் உயரத்தை கடந்த முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை தேவ் மீனா பெற்றுள்ளார். தேவ் மீனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் அவர் பதிவு செய்த 5.46 மீட்டரே இதற்கு முன் தேசிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த உயரத்தை விடக் கூடுதலாக கடந்து, தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-dev-meena-sets-a-new-national-record-in-pole-vault




