சென்னை, ஆன்லைன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இதை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு அந்த மனுவில், ஆன்லைன்மூலம் மது வாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்கமுடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மதுவாங்க வாய்ப்பு உள்ளது. ரேஷன் கடை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கால் வலிக்க வரிசையில் நிற்கும் முதியோர், பெண்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளது. மிகப்பெரிய தீங்கு இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்பதால், ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வு காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, 'அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு அரசு நியமித்துள்ள குழுவின் விசாரணை வரம்பில் மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்க கோரியுள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாததால் இளைஞர்கள் எளிதில் மது வாங்க வாய்ப்புள்ளது என்பதால் ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-issue-chennai-high-court-orders-tamil-nadu-government-to-respond




