திருப்பூர், 60 சதவீதம் உயர்வு பருத்தி வினியோகத்தில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஜின்னிங் ஆலைகளிடம் குறைந்துள்ள பருத்தி இருப்பு மற்றும் சந்தைக்கு வரும் பருத்தியின் அளவு குறைந்துள்ளதால் நூற்பாலைகளுக்கு பருத்தி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 1 கிலோ பருத்தி நூல் சுமார் ரூ.250 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. அதாவது 60 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் கடுமையான செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றமும் உற்பத்தி செலவை மேலும் அதிகரித்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருள் மேலும் வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்திய பருத்தி மற்றும் பருத்தி நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு மூலப்பொருள் விலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற புதிய வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்ட நாடுகளின் சந்தைகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நூல் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ பருத்தி ரூ.275, நூலாக மாற்றப்பட்டால் ரூ.325 மதிப்பை பெறுகிறது. ஆனால், அதே பருத்தி மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் போது, ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை மதிப்பு கிடைக்கக்கூடும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நூல் ஏற்றுமதியை முறைப்படுத்துங்கள் இந்தநிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் தின் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், '20 எஸ் கவுண்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட பருத்தி நூல் ஏற்றுமதியை உரிய முறையில் முறைப்படுத்தி, உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான நூல் உரிய விலையில் கிடைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் விரைவான தலையீடு ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறைக்கு நிவாரணம் அளிப்பதுடன், இந்தியாவின் மதிப்பு கூட் டப்பட்ட ஆடை ஏற்றுமதியை உலகளவில் மேலும் விரிவுபடுத்தவும், சர்வதேச போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும்' என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cotton-yarn-exports-must-be-regulated-aepc-urges-central-government




