சென்னை, தயாரிப்பாளர் தமிழ் குமரன் 'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது, “ சிக்மா படம் சிறப்பாக வந்துள்ளது, ஜேசன் சஞ்சய் படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார், எங்களது பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இனி பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், 'சிக்மா' படத்தின் மிகப்பெரிய தூணே ஜேசன் சஞ்சய்தான்.” என்றார். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் வருகிற 2ந் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பாடல்கள் வைரல் இதற்கிடையில், இந்த படத்திலிருந்து ‘சிக்மா ஸ்டைல்’, ‘அய்யய்யோ அம்மாடி’, ‘ரேஜ் ஆப் சிக்மா’, ‘சுலோச்சனா’ ஆகிய பாடல்களில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ‘சுலோச்சனா’ பாடலில் சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளார். புரமோஷன் நிகழ்ச்சி இந்த படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். 'சிக்மா' படத்தின் மிகப்பெரிய தூண் இந்த நிலையில், தயாரிப்பாளர் தமிழ் குமரன் 'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது கவனத்தை பெற்றுள்ளது. அவர் பேசியதாவது, “பல ஊர்களில் 'சிக்மா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் ஜேசன் சஞ்சய்க்கு வைரல் தொற்று ஏற்பட்டுள்ளது, தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய சென்னை நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை, படம் வெளியான பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பார். 'சிக்மா' படம் சிறப்பாக வந்துள்ளது, ஜேசன் சஞ்சய் படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார், எங்களது பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இனி பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், 'சிக்மா' படத்தின் மிகப்பெரிய தூணே ஜேசன் சஞ்சய்தான்.” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jason-sanjay-is-the-biggest-pillar-of-the-film-sigma-producer-tamil-kumaran



