77 ஆண்டுகால நறுமணச் சிறப்பைக் கொண்டாடும் வகையில், உலகின் மிகப்பெரிய அகர்பத்தி தயாரிப்பு நிறுவனமான சைக்கிள் பியூர் அகர்பத்தி, சென்னையில் தனது புதிய பண்டிகைக் காலத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதிலும், நுகர்வோரின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் சைக்கிள் பியூர் அகர்பத்தி தொடர்ந்து பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. Cycle Pure Agarbathi - Arjun Ranga ஆண்டுக்கு 1,200 கோடி ஊதுபத்திகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் சைக்கிள் பியூர் அகர்பத்தி, இன்று உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இல்லங்களுக்கு நம்பிக்கையின் நறுமணத்தைக் கொண்டு செல்வதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 கோடிக்கும் மேலான பிரார்த்தனைகளுக்குத் துணையாக நிற்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, இந்நிறுவனம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும், பாரம்பரியக் கைவினைத்திறனை நவீன கண்டுபிடிப்புகளுடன் இணைத்துப் புதிய நறுமண அனுபவங்களை உருவாக்கி வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் சைக்கிள் ஸ்டெம் சாம்பிராணி, நவீன் பூஜை நெய், குட் லக் பிரீமியம் அகர்பத்தி (லாவெண்டர், சந்தனம், கஸ்தூரி) மற்றும் சைக்கிள் பியூர் கோல்ட் பிரஸ்டு எடிபிள் நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டிய உண்ணக்கூடிய நல்லெண்ணெய்) ஆகியவை அடங்கும். அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தயாரிப்புகள், இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகளில் வேரூன்றிய அதே வேளையில், தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன. Cycle Pure Agarbathi - Arjun Ranga இந்த அறிமுக விழாவில் பேசிய என்.ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், "77 ஆண்டுகளாக, எங்களின் பயணம் ஒரு எளிய தத்துவத்தால் வழிநடத்தப்படுகிறது - பாரம்பரியத்தை மதிப்பது, அதே வேளையில் நுகர்வோரின் மாறும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து எங்களை மேம்படுத்திக் கொள்வது. இந்திய இல்லங்களில் நறுமணத்திற்கு எப்போதுமே ஒரு தனி இடமுண்டு. அந்த உணர்வுபூர்வமான தொடர்பைப் பாதுகாப்பதும், இன்றைய நுகர்வோருக்குப் பொருத்தமான தயாரிப்புகளை உருவாக்குவதும் எங்களது பொறுப்பாகும். நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொன்றும் தரம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் நம்பகமான அங்கமாக இருப்பதை உறுதி செய்கிறது," என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/sponsored/sponsor-content/cycle-pure-agarbathies-launches-new-festive-products-in-chennai




