பெருந்துறை ஈரோட்டில் ரூ.1.5 கோடி பணத்துடன் சென்ற காரை பல கி.மீ. துரத்தி சென்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பெருந்துறை போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தங்களுடைய வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர். பெருந்துறை பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலை நால்ரோடு சந்திப்பில் காரை மடக்கி பிடித்து, சோதனை செய்தனர். கட்டு கட்டாக பணம் அந்த கார் மராட்டிய மாநில பதிவு எண் கொண்டது என்பதும், காருக்குள் கட்டு கட்டாக பணம் இருந்ததும் தெரிய வந்தது. அவற்றை எண்ணி பார்த்தபோது ரூ.1 கோடியே 50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் பணத்தை பறிமுதல் செய்து, காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னில் நாக்னே (வயது 35), அக்ஷய் (வயது 37) என்பதும், கோவையில் உள்ள நகைகள் தயாரிப்பு பட்டறை ஒன்றில், தங்கம் மற்றும் வெள்ளியை பிரித்தெடுக்கும் வேலை பார்த்து வருகிறார்கள் என்பதும், அவர்கள் கோவையில் இருந்து காரில் பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணை ஆனால் பணத்தை எதற்காக காரில் கொண்டு வந்தனர். எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து அவர்கள் சரியான பதில் எதுவும் கூறவில்லை. இதுதொடர்பாக 2 பேரிடமும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார், 2 பேரையும், காருடன் பிடிபட்ட ரூ.1.5 கோடியுடன் ஈரோடு வருமான வரித்துறை அலுவலர் பிரின்ஸ்ராஜிடம் ஒப்படைத்தனர். அவர்களை, வருமான வரித்துறையினர் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பிடிபட்ட பணம் குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/car-speeds-off-with-rs-15-crore-police-intercept-it-after-a-chase-spanning-several-kilometers-commotion-in-erode




