புதுடெல்லி,- ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடையும், அந்த நாட்டில் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கவும் வகைசெய்யும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றி உள்ளது.இது இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்காவின் மசோதா நிறைவற்றத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது. ஏற்கனவே பலமுறை கூறியதை போலவே, இந்தியா தனது 140 கோடி மக்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது' என குறிப்பிட்டு உள்ளது. மேலும் அதில், 'பல்வேறுபட்ட கொள்முதல் முறைகள் மூலமாகவும், மாறிவ ரும் சந்தை நிலவரங்களின் அடிப்படையிலும் இது தொடர்ந்து செயல்படுத் தப்படும். சமீபத்திய மாதங்களில் அமெரிக்காவிடம் பல்வேறு மட்டங்களில் இது குறித்து பேசப்பட்டு இருக்கிறது. அப்போது. இருதரப்பு உறவுகளுக்கு மட்டுமின்றி, சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் ஏற்படக்கூடிய அதன் தாக்கங்கள் குறித்தும் இந்தியா மிக தெளிவாக எடுத்துரைத்தது' என்றும் கூறப்பட்டு இருந்தது. நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்பதை அமெரிக்காவிடம் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் வெளி யுறவு அமைச்சகம் கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/measures-to-safeguard-the-indian-economy-central-government-statement




