சென்னை, அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்; தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம். இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- முதலீட்டு தரவுகள் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டு தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியை காட்டுகின்றன. மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டை காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. 17-வது இடம் முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூ. 11,237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களை கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம். இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு தனியார் முதலீடுகளும் ரூ. 2,080 கோடியிலிருந்து ரூ. 720 கோடியாக குறைந்துள்ளன. தொழில் கொள்கை வெறும் விளம்பர பேச்சுகளாலும், ரீல்ஸ்களாலும் மட்டும் புதிய முதலீடுகளை கொண்டுவர முடியாது என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசுக்கு இந்த தரவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. எனவே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக சரியான தொழில் கொள்கைகளை உருவாக்கி, சரிந்துவரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்; இல்லையேல், நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதை தவெக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/industrial-investments-are-flocking-to-neighboring-states-tamil-nadu-is-witnessing-a-massive-decline-under-the-tvk-government-nainar-nagendran




