சென்னை, தங்கம் விலை கடந்த 6-ந்தேதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ரூ.1,20,240-க்கு விற்பனையானது. இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-whats-todays-rate




