திருவாரூர், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 3 டன் எடை கொண்ட பிரைடி இன திமிங்கலத்தை, வனத்துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். திமிங்கலம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலகப் புகழ்பெற்ற அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இதன் லகூன் (Lagoon) எனப்படும் ஆழமற்ற கடல் பகுதியில், சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி இனத்தைச் சேர்ந்த பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று திடீரென கரைஒதுங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு பணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து கூட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த ராட்சத திமிங்கலம் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவித்த வனத்துறையினர், "கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அதன் உடல்நலமும் ஆரோக்கியமாகவே காணப்பட்டது" என்று உறுதிபடுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/whale-that-washed-ashore-in-the-forests-of-muthupettai-has-been-safely-rescued




