'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் இயக்கியிருந்தார். இயக்குநர் அண்ட்ரூ லூயிஸின் 'பாக்கெட் நாவல்' கதையை, தியாகராஜன் குமாரராஜா படமாக்கி வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடித்தது குறித்தும், விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் மாளவிகா மோகனன், அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Vijay Sethupathi - Malavika Mohanan அந்தப் பதிவில் அவர், "சில திரைப்படங்கள் உருவாகும்போது, அவை தனக்கான ஒரு குட்டி உலகமாகவே மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அழகான படத்தின் அங்கமாக இருந்ததை எண்ணி நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். மாதக்கணக்கில் ஒரு முழு குழுவோடும் தினமும் பல மணிநேரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறோம். ஒன்றாகச் சாப்பிடுகிறோம். மணிக்கணக்கில் பேசுகிறோம், நல்ல நாள்களையும் கடினமான நாள்களையும் கடக்கிறோம், உணர்ச்சிப்பூர்வமான ஏற்ற இறக்கங்களை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். நமக்கு தெரியாமலேயே, அவர்கள் நம் சொந்த வீட்டிற்கு அப்பால் மற்றொரு வீடாகவே மாறிவிடுகிறார்கள். விஜய் சேதுபதி, மிகவும் அக்கறையுள்ள, விட்டுக்கொடுக்கும் ஒரு சக நடிகராக இருந்ததற்கு என் நன்றிகள். எவ்வளவு நேரமானாலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், நான் என் நடிப்பைச் சரியாகக் கொண்டு வர எனக்கு அவ்வளவு ஊக்கமும், இனிமையான அணுகுமுறையும் அளித்து ஒரு வசதியான கம்ஃபோர்ட்டான சூழலை உருவாக்கித் தந்தீர்கள். View this post on Instagram A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) நாங்கள் ஏற்கனவே 'பேட்ட', 'மாஸ்டர்' என இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், ஒரே திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. அதனால், இந்த வாய்ப்பு ரொம்ப நாளாகவே பாக்கியாகவே இருந்தது. அது எவ்வளவு அழகான ஒன்றாக அமைந்திருக்கிறது! தியாகராஜன் குமாரராஜா உண்மையிலேயே செம்ம கூலான ஒரு மனிதர்! மனிதர்களையும் இந்த உலகத்தையும் நீங்கள் பார்க்கும் விதம் மிகவும் தனித்துவமானது. உங்களுடன் பணியாற்றியது, அதைவிட முக்கியமாக உங்களை ஒரு மனிதராகவும் நண்பராகவும் புரிந்துகொண்டது என் வாழ்நாளின் சிறந்த அனுபவம். ஒரு படைப்பாளியாக நீங்கள் உறுதியாகவும், அதே சமயம் இரக்கத்தோடும் இருக்கும் விதம் அற்புதமானது; நீங்கள் செய்வதையெல்லாம் பார்த்து நான் எப்போதும் வியந்திருக்கிறேன். 'பாக்கெட் நாவல்' வெறும் படம் மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒன்று!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/malavika-mohanan-vijay-sethupathi-pocket-novel-post



