லண்டன், இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 அந்த வகையில் இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து 254 ரன்கள் இங்கிலாந்தின் சவுதம்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹாரி புரூக் அதிகபட்சமாக 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து வெற்றி இதனை தொடர்ந்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கையை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியின் சோனி பேக்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/first-t20-england-crushes-sri-lanka-huge-win




