வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 'விஸ்வநாத் & சன்ஸ்' ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழில் வெளியாகியிருக்கும் சிறப்பு நேர்காணலில் பேசிய சூர்யா தனது நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை படத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். "அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறியது என்ன? இதுதொடர்பாக பேசியிருக்கும் சூர்யா, " நான் நிறைய டிராவல் செய்வேன். அதனால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் இருந்தது. தியா பிறக்கும் போது மூன்று வருடங்களுக்கு நான் பெரியதாக ஊரில் இல்லை. டிராவல் செய்துக்கொண்டே இருந்தேன். அதனால் தேவ் பிறந்ததற்கு பிறகு தவறை உணர்ந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட ஆரம்பித்தேன். பெண் குழந்தை பிறந்தால் லட்சுமி கிடைத்திருப்பதாக சொல்வார்கள். அது போல தியா பிறந்த பின்பு தான் நான் வீடு வாங்கினேன். சூர்யா அதனால் வீட்டிற்குள் நுழையும் போது தியாவின் பாதத்தை முதலில் தரையில் வைத்து பின்பு நாங்கள் உள்ளே சென்றோம். இந்த படத்தில் அந்தக் குழந்தை வீட்டிற்குள் முதல் முறையாக நுழையும்போது அதனை செய்யலாம் என்று இயக்குநரிடம் கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். அதனால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தை வீட்டிற்குள் நுழையும்போது அவரது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே சென்றோம்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/real-life-incident-from-suriyas-life-venky-atluri-recreates-it-in-viswanath-sons




