Photo: magnific ஆந்திரவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து, உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா முடிவுக்கு வந்துவிட்ட தாக பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் இன்னும் நம்மிடையே இருப்பதாக மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். Photo: magnific மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, பல நாட்களாக நீடிக்கும் அதிக காய்ச்சல், குழப்பமான மனநிலை, விழித்திருக்க முடியாத அளவுக்கு அதிக தூக்கக் கலக்கம் போன்ற அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியமானது. Photo: magnific தற்போது கொரோனா மட்டும் அல்ல இன்புளூயன்சா, ஆர்.எஸ்.வி. (ரெஸ்பிரேட்டரி சின்சிட்டியல் வைரஸ்), அடினோவைரஸ் போன்ற சுவாச தொற்றுகளும் பரவி வருகின்றன. சிலருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுகள் கூட ஏற்படலாம். Photo: magnific கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், இருமல் அல்லது தும்மலின்போது வாய், மூக்கை மூடுங்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிலேயே ஓய்வெடுங்கள் மற்றும் சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணியுங்கள். Photo: magnific அதிக ஆபத்து உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்ளுங்கள். Photo: magnific மருத்துவ நிபுணர்கள் பலரின் கருத்துப்படி, கொரோனா இனி பருவகால ஜலதோஷம், காய்ச்சல் போல அவ்வப்போது பரவக்கூடிய வைரஸாக மாறியுள்ளதாக கருதப்படுகிறது. எனவே புதிய பாதிப்புகள் பதிவாகும் போதெல்லாம் பதற்றப்பட வேண்டியதில்லை. Photo: magnific அதே நேரத்தில் அலட்சியமும் கூடாது. அறிகுறிகள் தென்பட்டால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதும்தான் பாதுகாப்பான அணுகுமுறையாகும். Photo: magnific தொண்டை வலி, லேசான காய்ச்சல், தொடர் இருமல், தலைவலி, அதிக உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல், உடல்வலி போன்ற எல்லாம் அலட்சியம் செய்யக்கூடாத புதிய அறிகுறிகள் புளிப்பு செர்ரி பழச்சாறு: உடலுக்கு தரும் 7 முக்கிய நன்மைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/resurging-covid-19-fears-new-symptoms-that-should-not-be-ignored




