திருச்செந்தூர், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜெபமாலை பவனி அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய அருட்தந்தை காட்வின் தலைமையில் பாளையங்கோட்டை மறைமாவட்டம் அருட்தந்தை சேவியர் கொடியேற்றினார்.தொடர்ந்து அடைக்கலாபுரம் பங்குத்தந்தை லாசர் தலைமையில் திருச்செபமாலை பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை ஜெபமாலை பவனியும், மாலையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கிறது. தேர் பவனி 9-ம் திருவிழாவான அக்டோபர் 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தின் அருட்தந்தை சகாய லூட்ரின், அழகப்புரம் உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு ஆகியோர் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்குகிறார்கள். அன்றைய தினம் மாலையில் குறுக்குச்சாலை மறைமாவட்ட முதன்மை குரு தோமினிக் அருள்வளன் மறையுரையாற்றுகிறார். மேலும் அன்றிரவு அதிசய ஆரோக்கிய அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. கூட்டு திருப்பலி 10-ந் திருவிழாவான 7-ந் தேதி(புதன்கிழமை) வேம்பார் புனித தோமையார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. கூத்தன்குழி உதவி பங்குத்தந்தை ஆன்றனி மதன் மறையுரை வழங்குகிறார். தொடர்ந்து 8-ந் தேதி(வியாழக்கிழமை) அசன விருந்து நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை லாசர், தூய அன்னாள் சபை அருட்சகோதரிகள், திருவிழா பணிக்குழுவினர், பங்கு மேய்ப்பு பணிக்குழு, பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/festival-at-the-our-lady-of-miraculous-health-church-near-tiruchendur-begins-with-flag-hoisting




