டெல்லி, மன்மோகன் சிங்கின் 94வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பிறந்த மன்மோகன் சிங் தனது 92வது வயதில் 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்தார். மன்மோகன் சிங் பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை இந்நிலையில், மன்மோகன் சிங்கின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மன்மோகன் சிங் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/manmohan-singh-94th-birthday-sonia-rahul-kharge-pay-tribute




