சென்னை, சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஸ்மின், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 'போக்சோ' சட்டத்தில் கைது ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய காமக்களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரமணியின் பாலியல் லீலைகளுக்கு இவர்கள் 2 பேரும் தங்களுடைய வீட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். 2003-ம் ஆண்டில் இருந்து இவரது பாலியல் விளையாட்டுக்கள் தொடர்ந்து நடந்துள்ளது. ஆபாச வீடியோக்கள் தற்போது வரையில் சுமார் 23 ஆண்டுகளாக இவர் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது முன்னாள் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்கள் கணேசனின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வீரமணி மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கை போலீசார் கோர்ட்டில் முடித்து வைத்துவிட்டனர். ஆனால் கோர்ட்டு அதை ஏற்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. போலீசார் சம்மன் இந்த வழக்கை பொறுத்தமட்டில் முக்கிய குற்றவாளியான வீரமணியும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, வீரமணி வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. காத்திருப்போர் பட்டியல் இந்நிலையில் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஷ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். யாஸ்மினை பணியில் இருந்து விடுவிக்க சென்னை ஆணையருக்கு டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜெம் வீரமணி பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 2024-ம் ஆண்டு முதல் 2026 தேர்தலுக்கு முன்பு வரை சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்.சிடம், ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தாக ரஞ்சன் குமார் கூறியிருந்தார். இந்நிலையில், தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, போலீஸ் அகாடமி இயக்குநராக அருண் ஐ.பி.எஸ். இருந்து வரும் நிலையில், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கோவை மண்டல ஐ.ஜி. கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-in-gem-granite-veeramani-case-assistant-commissioner-yasmin-transferred-to-the-waiting-list




