இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: செப்டம்பர் 29-ந் தேதி (செவ்வாய்) * சங்கடகர சதுர்த்தி. * மகாபரணி. * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் ஆடும் பல்லக்கில் பவனி. * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * சமநோக்கு நாள். 30-ந் தேதி (புதன்) * கார்த்திகை விரதம். * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. * வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம். * திருச்செந்தூர், பழனி தலங்களில் முருகப் பெருமான் புறப்பாடு. * கீழ்நோக்கு நாள். அக்டோபர் 1-ந் தேதி (வியாழன்) * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு. * மேல்நோக்கு நாள். 2-ந் தேதி (வெள்ளி) * தேய்பிறை சஷ்டி விரதம். * ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு. * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. * சமநோக்கு நாள். 3-ந் தேதி (சனி) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் வரதராஜர், காட்டுபரூர் ஆதிகேசவர் அலங்கார திருமஞ்சனம். * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. * திருவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி. * மேல்நோக்கு நாள். 4-ந் தேதி (ஞாயிறு) * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு அலங்கார திருமஞ்சனம். * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. * சமநோக்கு நாள். 5-ந் தேதி (திங்கள்) * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். * திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு. * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம். * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. * மேல்நோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-september-29-2026-to-october-5-2026




