சென்னை, உதயநிதி கைது தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர். தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். பரபரப்பான அரசியல் சூழல் உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு சிலர் பொதுமக்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால். சட்டம் தன் கடமையை செய்யும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-the-public-minister-rajmohan-warns-dmk




