மும்பை, கள்ளக்காதலை கண்டித்த கணவரை பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை 3 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. கள்ளக்காதல் மும்பையை அடுத்த நவிமும்பை ஐரோலி பகுதியை சேர்ந்தவர் பலிராம் சூர்யநாத் குஷ் வாகா (வயது 50). இவரது மனைவி சுனிதா (40). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, சுனிதாவுக்கு ராகுல் தஷ்ரத் பிரஜாபதி (30) என்ற ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பலிராமுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்து வந்துள்ளார். சதித்திட்டம் இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் பலிராமை தீர்த்துக்கட்ட சுனிதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். வெட்டப்பட்ட உடல் கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந்தேதி இரவு, தனது குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்த சுனிதா, கணவர் பலிராம் அசந்து தூங்கிக்கொண்டிருந்த போது கள்ளக்காதலன் ராகுலை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பலிராமின் கழுத்தை நெரித்தனர். இதில் மயங்கிய பலிராமின் கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக பலிராமின் உடலை கத்தியால் 3 துண்டுகளாக வெட்டினர். அந்த உடல் பாகங்களை தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி, ராகுலின் ஆட்டோவில் ஏற்றிச்சென்று கவ்லிதேவ் மலை காட்டுப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு தப்பினர். போலீசில் புகார் கொலைக்கு பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, சுனிதா தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு குழந்தைகளுடன் கன்சோலி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பலிராமின் சகோதரர் சுனிதாவின் வீட்டிற்கு வந்து பலிராம் குறித்து கேட்டுள்ளார். அப்போது சுனிதா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். 11 மாதங்களுக்கு பிறகு போலீசார் விசாரணையை தொடங்கியதும் கள்ளக்காதல் ஜோடி, தங்களது செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றி வந்தனர். இதையடுத்து, போலீசார் சுனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுலை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பலிராமை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் 11 மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/husband-killed-body-chopped-into-pieces-navi-mumbai-woman-and-lover-arrested-after-11-months




