Fuld artikel
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, வெனிசுலாவின் கரீபியன் கடற்கரைக் பகுதியில் உள்ள மொரோன் நகருக்கு மேற்கே, பூமிக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த 39 வினாடிகளில் அதைவிடப் பெரிய அளவில் 7.5 ஆகவும் இந்த இரட்டை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. வெனிசுலா நிலநடுக்கம் - 2026 இதன் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. குறிப்பாக மைக்கீடியா சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட்டது. அத்துடன் மெட்ரோ மற்றும் இரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெனிசுலாவின் தலைநகர் காரகாஸின் முக்கியப் பகுதியான அல்தாமிராவில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களின் கட்டிடங்கள் உட்படக் குறைந்தது மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினரும் தன்னார்வலர்களும் இடிபாடுகளை அகற்றி, உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லா குவைரா பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றும் முற்றிலுமாக சிதைந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த இயற்கை பேரிடரைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். வெனிசுலா நிலநடுக்கம் - 2026 இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், "பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ கூறுகையில், ``நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், அடுத்தடுத்து வரக்கூடிய நிலநடுக்க அதிர்வுகளுக்கு அவை இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அனைவரும் திறந்தவெளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார். அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி... இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




